Thursday, April 1, 2010

எழுத்தாளர் மணவை முஸ்தபா


சென்னை, ஏப்.1-_ அறி-வியல் தமிழ் எழுத்தாளர் மணவை முஸ்தபாவின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் என்று முதல்வர் கலைஞர் அறிவித்துள்ளார். இதற்-காக மணவை முஸ்த-பாவுக்கு பரிவுத் தொகை-யாக ரூ.10 லட்சம் அளிக்-கப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்தி-: அறிவியல் தமிழ் எழுத்-தாளர் மணவை முஸ்-தபா 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் தொண்டு ஆற்றி வரு-கிறார். மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம், கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி போன்ற அவரது நூல்கள் பரிசுகள் பல பெற்றுள்-ளன. மேலும், தமிழக அரசின் கலைமாமணி விருது, திரு.வி.க. விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

இப்போது முழுமை-யாகப் பேசவோ, எழுந்து செயல்படவோ இயலாத நிலையில், உடல்நலம் குன்றியுள்ள நிலையில் உள்ளதாக முதல்வர் கலைஞருக்கு எழுதிய கடிதத்தில் அவர் தெரி-வித்திருந்தார்.

மருத்துவச் செலவுக்கு பயன்படும் வகையில், தமது படைப்புகள் அனைத்தையும் நாட்டு-டைமையாக்கி, தமக்குப் பரிவுத் தொகை வழங்க வேண்டும் என்று கோரி-யிருந்தார்.

அவரது கோரிக்-கையை ஏற்று, சிறப்பு நிகழ்வாகக் கருதி மணவை முஸ்தபாவின் படைப்புகளை நாட்டு-டை-மையாக்கி, அவருக்கு ரூ.10 லட்சம் பரிவுத் தொகை வழங்க முதல்வர் கலைஞர் புதன்கிழமை உத்தரவிட்டார்.

viduthalai:01/04/2010